சந்திரபாபு நாயுடுவிடம் பேசிய எதிர்க்கட்சிகள் -மோடிக்கு இமாலய சிக்கல்

சென்னை: ஜூன் 18- லோக்சபா சபாநாயகர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ‘சபாநாயகர்’ பதவியின் மீது அனைவரது கவனமும் குவிந்துள்ளது. இந்த நிலையில்தான் சந்திரபாபு நாயுடுவிடம் இந்திய கூட்டணி தலைவர்கள் பேசி வருகிறார்களாம்.
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி இரண்டு நாட்களுக்குப் பிறகு, சபாநாயகர் பதவிக்கான தேர்தல் ஜூன் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில்தான் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி முக்கியமான சில வேலைகளை பார்க்க தொடங்கி உள்ளதாம்.
அதன்படி லோக்சபா சபாநாயகர் பதவியை பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) கட்சிகளான ஜனதா தளம் (ஐக்கிய) மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு (டிடிபி) ஒதுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் இந்திய அணி வலியுறுத்த முடிவு செய்துள்ளதாம். இதற்காக சந்திரபாபு நாயுடுவிடம் இந்திய கூட்டணி தலைவர்கள் பேசி வருகிறார்களாம்.
240 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட பாஜக பெரும்பான்மைக்கு 32 இடங்கள் குறைவாகவே உள்ளது. என். சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் முறையே 16 மற்றும் 12 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது அரசாங்கத்தை அமைப்பதில் முக்கியமான நபர்களாக உருவெடுத்து ‘கிங்மேக்கர்களாக’ உள்ளனர்.
பிளான் என்ன?: இந்த நிலையில் சபாநாயகர் பதவியை எப்படியாவது எடுத்துக்கொள்ளலாம் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) கட்சிகளான ஜனதா தளம் (ஐக்கிய) மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு (டிடிபி) ஒதுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் இந்திய அணி வலியுறுத்த முடிவு செய்துள்ளதாம்.
பத்து வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆர்வம் காட்டி, துணை சபாநாயகர் பதவியை தங்களுக்கு வழங்காவிட்டால் அழுத்தம் கொடுக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். தீவிர முயற்சி: இதில், சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் பாஜக கூட்டணியில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவியை பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆந்திர மாநில பாஜக தலைவரும், ராஜமுந்திரி எம்.பி.யுமான டக்குபதி புரந்தேஸ்வரி 18வது மக்களவையில் சபாநாயகர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார். இவரை சபாநாயகராக்க வேண்டும் என்று பாஜக காய் நகர்த்தி வருகிறதாம். இதனால் இவரை பற்றிய “ஹிஸ்டரியை” டெல்லி பாஜக ஆய்வு செய்து வருகிறதாம். அதோடு அமித் ஷாவும் இவர் நெருக்கமாக “வாட்ச்” செய்து வருகிறாராம்.
எதிர்க்கட்சிகள் பிளான்; இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 18வது மக்களவையில் சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த திட்டமிடுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகள் துணை சபாநாயகர் பதவியை தங்கள் முகாமுக்கு வழங்காவிட்டால், 18வது மக்களவையில் சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தலாம் திட்டமிடுகிறதாம். 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி நிறைவடைகிறது.ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு கூட்டத்தொடரில், சபாநாயகர் தேர்தலுக்கான பணிகள் ஜூன் 26ம் தேதி நடக்கும். துணை சபாநாயகர் பதவி: 17வது மக்களவையில் பாஜகவின் ஓம் பிர்லா சபாநாயகராக இருந்த நிலையில், துணை சபாநாயகர் அலுவலகம் காலியாக இருந்தது. இந்திய கூட்டணி 233 இடங்களில் வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சிகள் மீண்டும் எழுச்சி கண்டுள்ளன. இந்த நிலையில் சபாநாயகர் தேர்தலில் சில கட்சிகள் கிராஸ் வாக்குகள் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதாவது சிவசேனா, ஐக்கிய ஜனதா தளத்திலேயே சிலர் கிராஸ் வாக்குகள் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இதை மனதில் வைத்தே சபாநாயகர் பதவியை பெற இந்தியா கூட்டணி காய் நகர்த்துகிறதாம். இந்தியா கூட்டணி ஒருவேளை சபாநாயகர் பதவியை பெற்றால் அது பாஜகவிற்கு பெரிய அடியாக இருக்கும். நாயுடுவும் திட்டம்: இப்படிப்பட்ட நிலையில்தான் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் ஸ்பீக்கர் போஸ்டை பாஜக கூட்டணியில் பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இரண்டு பேருமே “சபாநாயகர்” பதவியை தங்களுக்கான “இன்சூரன்ஸ்” ஆக பார்க்கின்றனர் என்று அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.