சந்திரபாபு நாயுடு கைது

விஜயவாடா, செப்டம்பர் 9-தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என். சந்திரபாபு நாயுடு ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிஐடி போலீசாரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
நந்தியாலா டிஐஜி ரகுராமி ரெட்டி தலைமையிலான போலீஸார் சந்திரபாபு நாயுடு வீட்டில் இன்று அதிகாலை 3 மணியளவில் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். சந்திரபாபு நாயுடுவை கைது செய்யும் ஆந்திர அரசின் நடவடிக்கைக்கு ஆந்திரா முழுவதும் உள்ள தெலுங்குதேசம் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் இதனால் ஆந்திராவில் பெரும் பதட்டம் நிலவுகிறது மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர் தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது
ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல் தொடர்பாக சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஊழலில் 371 கோடி ரூபாய் முறைகேடாக நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இந்த மோசடி வழக்கை சிஐடியிடம் ஒப்படைத்துள்ளார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்திரபாபு நாயுடு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய நேற்று நள்ளிரவு வாரண்டுடன் வந்த அதிகாரிகளை நாயுடு ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் போலீஸாருக்கும், நாயுடு ஆதரவாளர்களுக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டது.
போலீசார் நாயுடுவை இரவில் காவலில் எடுக்க முடியவில்லை. மீண்டும் காலை 6 மணியளவில் நாயுடுவின் இல்லத்திற்குச் சென்ற போலீஸார் அவரைக் கைது செய்தனர் போலீஸ் பணிக்கு இடையூறு செய்ததாக தெலுங்கு தேசத்தை சேர்ந்த சில தலைவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது திறன் மேம்பாட்டு கழகத்தில் முறைகேடு நடந்தது. இந்த ஊழலில் சந்திரபாபுநாயுடு ஏ1 குற்றவாளி என்று டிஐஜி ரகுராம ரெட்டி தெரிவித்தார்.நாயுடு மீது ஊழல் தடுப்புச் சட்டம் 1988ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது. 2015ல் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது திறன் மேம்பாட்டுக்காக சீமென்ஸ் மற்றும் டிசைன் டெக் நிறுவனங்களுடன் அரசு ஒப்பந்தம் செய்தது. அப்போது அவருக்கு எதிராக 371 கோடி ரூபாய்.
இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. எனவே, ஆகஸ்ட் 2020 இல், குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது .
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட போது சந்திரபாபு நாயுடு நிரபரிடம் கூறும்போது நான் எந்த தவறும் செய்யவில்லை என் மீது அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது நான் ஊழல் முறைகேடு எதுவும் செய்யவில்லை என்று கூறினார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள இதைக் கண்டித்து ஆந்திரா முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்