சந்திரபாபு நாயுடு பேட்டி

திருப்பதி: செப் 9 ஆந்திராவில் கைதான முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:- நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அரசியல் பழிவாங்கும் நோக்கில் அவர்கள் வேண்டுமென்றே என்னைக் கைது செய்து உள்ளனர்.
என்ன வழக்கில் கைது செய்தீர்கள் என போலீசாரிடம் கேட்டதற்கு அவர்கள் பதில் ஏதும் கூறவில்லை.
என் மீது முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யாமல் கைது செய்து உள்ளனர். நள்ளிரவில் என்னை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன. நான் எங்காவது ஓடி விடுவேனா. முன்னாள் முதலமைச்சருக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா?. என்னை கைது செய்வதன் மூலம் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே அச்சத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர். சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்வேன். தொண்டர்கள் பதட்டம் அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.