சந்தேகத்திற்கிடமாக பெண் கொலை

பெங்களூர் செப்டம்பர் 1-பெங்களூர் பாபுஜி நகரில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாபுஜி நகரை சேர்ந்த ஷில்பா (26) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.பாபுஜி நகரில் உள்ள அவரது வீட்டில் ஷில்பா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மர்ம நபர்கள் கொன்று தூக்கில் தொங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.சம்பவ இடத்திற்கு பட்டறையன்பூர் போலீசார் சென்று விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.