சனாதனம் குறித்த உதயநிதி பேச்சு – டெல்லியில் எதிர்ப்பு

புதுடெல்லி, செப்டம்பர். 4 சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு டெல்லியில் எதிர்ப்பு தெரிவித்து டெல்லி தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை ஆணையரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி பாஜக தலைவர் விரேந்திர சச்தேவா தலைமையில் மூத்த தலைவர்கள் குழு எதிர்ப்பு கடிதம் வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக கடிதம் அளித்துள்ளது.