சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை, நவ.17-
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டு, மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதியான இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
தனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சபரிமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின்போது, தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டும் 17-ந் தேதி (இன்று) முதல் 20.1.2023 வரை சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய நகரங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் பம்பைக்கு அதிநவீன சொகுசு பஸ்கள் சிறப்பு பஸ்களாக இயக்கப்பட உள்ளன. . மேலும், விவரங்களுக்கு 94450-14452, 94450-17793 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது