சப் இன்ஸ்பெக்டர் தேர்வு படிவங்கள் திருத்தம்: ரிசர்வ் போலீஸ் அதிகாரி கைது

பெங்களூர்: மே. 12 – போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் நியமன மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி ஐ டி அதிகாரிகள் ஓ எம் ஆர் படிவங்களை திருத்திய குற்றத்திற்க்காக நியமன துறையின் ஆயுத ரிசர்வ் படையின் ஆர் எஸ் ஐ லோகேஷப்பாவை கைது செய்துள்ளனர். பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த ஓ எம் ஆர் படிவங்கள் திருத்தப்பட்டதற்கு ஆர் எஸ் ஐ லோகேஷப்பா முக்கிய காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் லோகேஷப்பவை கைது செய்துள்ள சி ஐ டி அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மற்றொரு பக்கம் 2017ல் நடந்த ஆர் எஸ் ஐ நியமனங்களிலும் மோசடிகள் நடந்துள்ளது.
குறித்து சி ஐ டி போலீசார் தகவல்களை சேகரித்து வருகின்றனர். நியமன துறையின் பாதுகாப்பு அறையில் ஓ எம் ஆர் படிவங்கள் நிரப்பப்பட்டிருந்த பெட்டிகளை பாதுகாக்க வந்திருந்த ஆயுத ரிசர்வ் படையின் ஆர் எஸ் ஐ லோகேஷப்பா நியமிக்கப்பட்டிருந்தார். உத்தர கர்நாடகாவை சேர்ந்த லோகேஷப்பா பத்து வருடங்கள் பொது ஜன போலீஸ் துறையில் பணியாற்றியுள்ளார் . பின்னர் 2017-18ம் ஆண்டு ஆர் எஸ் ஐ நியமனத்தில் இரண்டாவது ரேங்க் பெற்று தேர்வானார். பின்னர் மங்களூருவில் பயிற்சியில் இருந்தார். பின்னர் நகரின் மத்திய ஆயுத பிரிவில் பணியாற்றியுள்ளார்.
பின்னர் டி வொய் எஸ் பி ஷாந்தகுமார் ஆலோசனையின் பேரில் நியமன துறையில் கூடுதல் பணிக்கு நியமித்துக்கொண்டுள்ளார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லோகேஷப்பாவுக்கு பாதுகாப்பு அறையின் பாதுகாப்பு பணி கொடுக்கப்பட்டது. சாந்தகுமாருக்கு நெருக்கமானவர்களின் ஓ எம் ஆர் படிவங்கள் எந்த பெட்டியில் உள்ளது , அவற்றின் ரோல் எண்கள் என்ன , என்பவை லோகேஷப்பாவிற்கு மிக நன்றாக தெரிந்திருந்தது. இந்த வகையில் பாதுகாப்பு அறையில் சில வேட்பாளர்கள் , பயிற்சி மையங்களின் ஆசிரியர்கள் மற்றும் இடை தரகர்கள் வாயிலாக ஓ எம் ஆர் படிவங்கள் திருத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.