சப் இன்ஸ்பெக்டர் பணி நியமன மோசடி மேலும் ஒரு குற்றவாளி சரண்

பெங்களூர்: செப்டம்பர். 15 – போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்களுக்கான நியமன தேர்வுகளில் நடந்துள்ள மோசடிகள் தொடர்பாக ஒரு குற்றவாளி இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான். இந்த மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாயிருந்த இரண்டு பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும்படி நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் தலைமறைவாயிருந்த இரண்டு பேரில் ஒருவன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான். இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை வலை வீசி தேடிடினும் இது வரை இவர்கள் கிடைத்திருக்கவில்லை. குனிகளை சேர்ந்த சித்தராஜு மற்றும் போரேகௌடா குறித்து சம்மந்த பட்ட அதிகாரிகளிடம் சர்வே செய்து அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். பி எஸ் ஐ மோசடிகள் கும்பலில் ஹைகிரௌண்ட் வழக்கில் சித்தராஜு மற்றும் போரேகௌடா 36 மற்றும் 37வது குற்றவாளிகள். இவர்கள் இருவரும் எப் டி ஏ ஹர்ஷாவுடன் இடை தரகர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள். இருவரும் சேர்ந்து கோடிக்கணக்கில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த வளர்ச்சிக்கு பின்னர் போரேகௌடா தற்போது நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான். இந்த பி எஸ் ஐ மோசடி வழக்கு தொடர்பாக கலபுரகி மற்றும் பெங்களூரில் அதிகாரிகள் , இடைத்தரகர்கள் மற்றும் தேர்வு வேட்பாளர்கள் உட்பட 90 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். .