சமயபுரத்து மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா

தஞ்சாவூர், ஆக. 3
கபிஸ்தலம்; சுவாமிமலை அருகே உள்ள அசூர் ஊராட்சி, வேளாக்குடி, கிராமத்தில் உள்ள சமயபுரத்து முத்துமாரியம்மன், கோவிலில் ஆடி திருவிழா நடந்தது. விழாவையொட்டி மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பாலக்கரை பகவத் காவிரி படித்துறையிலிருந்து பக்தர்கள் காவடி, எடுத்து முக்கிய வீதி வழியாக சென்று கோவிலை அடைந்தனர். தொடர்ந்து சமயபுரத்து முத்துமாரியம்மனுக்கும், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, பால் அபிஷேகம் நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) முளைப்பாரி, கரைத்தல் காப்பு அறுத்தல் நடக்கிறது.