சமூக ஊடகத்தில் நம்பர் ஒன் இடம் பிடித்த டென்னிஸ் பிரபலம்

நியூயார்க், நவ. 24- டென்னிஸ் விளையாட்டில் முன்னணி வீரர், வீராங்கனைகளுக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் இருக்கும். அவர்களில் பலர் வீரர்களின் தீவிர ரசிகர்களாகவும், ஒரு சிலர் அவர்களை ரோல் மாடலாகவும் கூட வைத்திருப்பார்கள். முன்னணியில் இல்லாதபோதும், சிலர் தங்களது துறைகளில் ரசிகர்களை ஈர்த்து வைத்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. சமூக ஊடகங்கள் பெருகியுள்ள காலத்தில், அதன் வழியே பலரும் ரசிகர்கள் வட்டங்களை விரிவாக்கி உள்ளனர். அவர்களில் ஒருவர் டென்னிஸ் வீராங்கனை ரேச்சல் ஸ்டல்மேன். ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் மற்றும் எம்மா ராடுகானு போன்றவர்கள் டென்னிஸ் விளையாட்டில் முன்னணியில் இருப்பதுடன் சமூக ஊடக தளங்களிலும் அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள், பின்தொடர்பவர்களை கொண்டுள்ளனர். ஆனால், விளையாட்டில் முன்னணி பெற போராடும் சூழலில் இருந்து விலகி, சமூக ஊடகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் முயற்சியில் ரேச்சல் இறங்கினார். அது அவருக்கு பலனளித்து உள்ளது. அமெரிக்காவின் மிசோரி பகுதியில் செயின்ட் லூயிஸ் நகரை சேர்ந்தவரான ரேச்சல், டிக்டாக்கில் பிரபல நபரானார். அவரது தந்திரம் நிறைந்த ஷாட்டுகளை பார்ப்பதற்காகவே, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரை டிக்டாக்கில் பின்தொடருகின்றனர். இன்ஸ்டாகிராமிலும் பிரபலமடைந்துள்ள ரேச்சல் 2.32 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். இதனால், டென்னிசில் சமூக ஊடகம் வழியே அதிக தாக்கம் ஏற்படுத்தியவர்களின் வரிசையில் ரேச்சல் நம்பர் ஒன் இடம் பிடித்து உள்ளார். இதற்கேற்ப இவரது புகைப்படங்கள், வீடியோக்கள் இடம் பெற்று இருக்கும். டென்னிசை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைய செய்வதற்கான முயற்சியில் இறங்கி உள்ளேன் என கூறும் அவர் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இதுபற்றி மேக்சிம் என்ற செய்தி இதழுக்கு ரேச்சல் அளித்த பேட்டியில் கூறும்போது, தடகள வீராங்கனையாக நான் விரும்பினேன். கல்லூரியில் டென்னிஸ் விளையாடும்போது, பல குணங்களை கற்று கொண்டேன். நேர நிர்வாகம், பணி நெறிமுறைகள் மற்றும் கடினம் வாய்ந்த சூழலில் இருந்து மீண்டு வரும் தன்மை ஆகியவற்றை கற்று கொண்டேன். கல்லூரி படிப்பு முடிந்ததும் டென்னிசை எனது தொழிலாக மாற்றி கொண்டேன்.