சமூக வலைதளங்களில்பொய் செய்திகள்முதல்வர் கடும் எச்சரிக்கை

பெங்களூர் : அக்டோபர் . 21 – சமுதாயத்தில் அமைதியை குலைக்கும் பகைமையை வளர்க்கும் தவறான தகவல்களை பரப்பிவிடும் நபர்கள் மீது எவ்வித தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என முதல்வர் சித்தராமையா போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நகரின் மைசூர் வீதியில் உள்ள மத்திய போலீஸ் ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் போலீஸ் தினம் தொடர்பாக காயமடைந்த போலீஸ் ஊழியர்களின் உருவங்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர் பேசிய முதல்வர் சித்தராமையா பொய் மற்றும் பகைமை தகவல்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பாதகமாகியுள்ளன. இந்த அமைதியிண்மையால் மக்களின் வருமானத்திற்கும் தடைகள் ஏற்படுகிறது. அதனால் பொய் பிரசாரங்களை கிளப்பும் சமூக வலைதளங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். அமைதியை குலைக்கும் பொய்கள் மற்றும் பகைமையை வளர்க்கும் பொய்கள் மிக வேகமாக பரவி வருகின்றன. அனைவரையும் சமநோக்கில் பாவிக்கும் மற்றும் நடத்தும் பொறுப்பு அரசு மற்றும் போலீஸ் துறை மீது இருக்கும் நிலையில் இதற்க்கு எதிராக தனி படை அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியான பாதையில் உள்ளதோ அத்தகைய மாநிலங்களுக்கு முதலீடும் அதிகரிக்கும். இதனால் வேலை வாய்ப்புகள் பெருகி மாநிலத்தின் வளர்ச்சியும் அதிகரிக்கும். இதனால் நாட்டின் தனிமனிதர் வருமானமும் அதிகரிக்கும். இதனால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் போலீஸ் அதிகாரிகள் முழுமூச்சுடன் செயல்பட வேண்டும் . தொழில் நுட்பங்கள் வளர்ச்சியடையும் நேரத்தில் போலீஸ் துறையும் பல்வேறு புதிய சவால்களை எதிர்கொள்ளவேண்டி வருகிறது. சைபர் தொழில் நுட்பத்துடனேயே சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இவற்றை சரியான விதத்தில் தடுத்து நிறுத்த வேண்டும். மகளிர் , குழந்தைகள் மற்றும் முதியோர் ஆகியோரின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்யத்வம் அளிக்க வேண்டியுள்ளது. சுமுகமான வாகன போக்குவரத்து மேலும் சீரடைய வேண்டியுள்ளது.. இதற்காக அதிகளவிலான போலீஸ் நியமனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகளவில் மகளிர் மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளது. புதிய வாகனங்களை வாங்க 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் . பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் பொலிஸாரின் உதவி தொகையை 20 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்தப்படும். போலீஸ் துறை மாநிலத்தின் கௌரவத்தை காட்டும் என்ற நிலையில் பணியாற்றிவருகிறது . அபிவிருத்தி மற்றும் சட்ட ஒழுங்குக்கு போலீஸ் துறை நேரடியில் தொடர்பு கொண்டுள்ளது. 2125 போலீஸ் குடியிருப்புகள் கட்டவென 450 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்படும். போலீஸ் ஊழியர் மற்றும் அதிகாரிகளின் உடல் நலத்திற்க்காக 100 கோடி ருபாய் ஒதுக்கப்படும். தவிர ஓய்வு பெட்ரா போலீஸ் ஊழியர்களின் நலனுக்கென் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது . போலீஸ் ஊழியரின் குழந்தைகளின் கல்விக்காக 7 மாவட்டங்களில் 7 போலீஸ் பொது பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது . இவற்றின் வாலெயிலாக போலீசாரின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தவிர போலீஸ் கேன்டீன்கல் துவங்கப்பட உள்ளது. நாட்டில் மாநில போலீஸ் துறை நல்ல பெயரை பெற்றுள்ளது. சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் போது போலீசார் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்த சமயனளில் சிலர் உயிரையும் துறக்கின்றனர் . நாட்டில் கடந்த செப்டெம்பர் 22 இலிருந்து ஆகஸ்ட் 13 வரை சுமார் 189 போலீஸ் அதிகாரிகள் , ஊழியர்கள் பணியிலிருந்த போது இறந்துள்ளனர். கர்நாடகத்தில் 19 போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மலரஞ்சலி செலுத்துகிறேன். இவ்வாறு முதல்வர் சித்தராமையா பேசினார்.