சமையலறையில் கஞ்சா வளர்த்த 2 பேர் கைது

கேரளா: செப்டம்பர். 16 – கேரள மாநிலம் திருக்காக்கரையிலுள்ள அஜந்தா அடுக்குமாடி குடியிருப்பில், கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அக்குடியிருப்பில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது பி 3 என்ற குடியிருப்பில், அபர்ணா ரெஜி என்ற பெண்ணும், அவரது உறவினரான ஆலன் ராஜூவும் சமையலறையில், தொட்டியில் வைத்து கஞ்சா செடி வளர்த்து வந்ததை கண்டுபிடித்தனர். சுமார் 1 1/2 அடி உயரமுள்ள கஞ்சா செடியை அங்கிருந்து போலீசார் கைப்பற்றினர். விசாரணையில் இருவரும் என்ஜினியர் எனவும் கடந்த 8 மாதங்களாக அக்குடியிருப்பி தங்கியிருப்பதாகவும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா செடிக்காகவே அவர்கள் தங்களது சமையலறையில் பிரத்தியேகமாக எல்.ஈ.டி விளக்குகளும், எக்ஸாஸ்ட் பேனும் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.