சம்பத்ராஜிக்கு நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி

பெங்களூர், நவ. 22- கே.ஜி ஹள்ளி டி.ஜே ஹள்ளி வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மேயர் சம்பத்ராஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதை அடுத்து இவர் சிறையிலிருந்து ஜெயதேவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் மேற்கண்ட இடங்களில் நடந்த பயங்கர வன்முறை சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த வழக்கில் முன்னாள் மேயர் சம்பத்ராஜ் பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றது இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் திடீரென காணாமல் போனார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு போலீசார் அவரை கைது செய்தனர் நீதிமன்ற அனுமதி பெற்று சிசிபி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர் சிசிபி காவல் முடிந்த பிறகு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் இந்த நிலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.