சம்பளம் வாங்குவது அரசிடம் வேலை செய்வது தனியார் மருத்துவமனையில்

பெங்களூர், மார்ச் 9-
பெங்களூர் அரசின் தன்னாட்சி நிறுவனமான நெப்ரோ யூராலஜி பிரிவின் டாக்டர்கள் ஐந்து பேர் ,பணியில் இருந்த போது, தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருவது குறித்து, லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய விசாரணையில், உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறுநீரகம், சிறுநீர்ப்பை பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இந்த அமைப்பு முன்னிலையில் இருந்து வருகிறது. விக்டோரியா வளாகத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனம், பெங்களூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் கடந்த 2007ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
டாக்டர்கள் முறையற்ற செயல்பாடு, சட்டவிரோத பதவி உயர்வு, மற்றும் உதவித்தொகையை தவறாக பயன்படுத்தியதாக, அந்த நிறுவனத்தில் உள்ள டாக்டர்கள் குற்ற சாட்டியுள்ளனர். சில மருத்துவர்கள் தங்கள் பணி நேரத்தில் தனியார் மருத்துவமனையில் பணி புரிவதால், நோயாளிகள் பாதிக்கப்படுவதாக லோக் ஆயுக்தாவில் இந்த நிறுவனத்தில் உள்ள மருத்துவர்கள் புகார் அளித்திருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்துள்ளதுடன் ஐந்து டாக்டர்கள் தங்கள் பணியின்போது தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவ கண்காணிப்பு அதிகாரி டாக்டர் பிரதீப், உதவி பேராசிரியர் டாக்டர் ஸ்ரீதர், டாக்டர் கிஷன், இணைப் பேராசிரியர் டாக்டர் சிவகுமார், சீனிவாசன் ஆகியோர் இடத்தில் விசாரணை நடத்தப்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு பணியாற்றுவதால் நோயாளிகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த மருத்துவமனையில் பேராசிரியர்கள் இருப்பதால் மருத்துவ கல்வி மாணவர்கள் பயிற்சியும் தடைப்பட்டு வருகிறது
என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோயாளிகள் பிரச்சனை இந்த நிறுவனத்தில் 160 படுக்கைகள் உள்ளது. இவர்களுக்கு 24 மணி நேரமும் டயாலிசிஸ் சேவை வழங்கப்படுகிறது.இதனால் தினமும் 80 முதல் 90 பேருக்கு டயாலிசிஸ் செய்து வருகிறார்கள். 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் இந்த டாக்டர்கள் வேலை செய்து வருவதால், நோயாளிகள் சிரமத்து ஆளாகிறார்கள். இது குறித்து பி.ஆர். ரமேஷ் எம்எல்ஏ, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார். இதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.ஆவணங்கள், வாக்குமூலங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட தகவல்களில் இருந்து ஐந்து மருத்துவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.ஆனால் மருத்துவத்துறை இயக்குனர் கேசவமூர்த்தி இந்த ஐந்து பேர் மீதும் எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. அவர் தனது கடமையை செய்ய தவறிவிட்டார் என தெரிய வந்துள்ளது.தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக நோயாளிகளுக்கு இந்த டாக்டர்கள், சிகிச்சை அளிக்க அதிகளவு சம்பளம் பெறுகின்றனர்.இதனால் தனியார் மருத்துவமனை அதிக லாபம் சம்பாதித்துக் வருகின்றனர்.இதனால் அரசின் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கின்றனர்.சிறுநீரகவியல், உயிர் வேதியல், மயக்க மருந்து பிரிவு ஆகியவற்றில் 30 பணியிடங்கள் காலியாகவே உள்ளன.அதனை நிரப்பப்படவில்லை.
46 டாக்டர்கள் முழுநேர பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதனால் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.