சரக்கு ரெயில் தடம் புரண்டது

ரோஹ்தாஸ், செப்டம்பர். 21 –
தீன் தயாள் உபாத்யாய் சந்திப்பு – காயா ஜங்சன் வழித்தடத்தில் இன்று காலை சரக்கு ரெயில் ஒன்றின் 20 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள குமாவ் ரெயில் நிலையம் அருகே இன்று காலை 6.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து “தீன் தயாள் உபாத்யாய் சந்திப்பு – காயா ஜங்சன் ரெயில் பாதையில் பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டம் குமாவ் நிலையம் அருகே காலை 6.30 மணியளவில் சரக்கு ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டது” என்று இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.