சரித்திரம் படைக்குமா சூரியகுமார் யாதவ் படை?

புதுடெல்லி: பிப்ரவரி 4-
ஐசிசி ஆடவருக்​கான 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்கையில் தொடங்​கு​கிறது. மார்ச் 8-ம் தேதி வரை நடை​பெறும் இந்த டி20 கிரிக்​கெட் திரு​விழா​வில் நடப்பு சாம்​பிய​னான இந்​தியா உள்​ளிட்ட 20 அணி​கள் கலந்​து​கொள்​கின்​றன. இவை 4 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. இதில் ‘ஏ’ பிரி​வில் இந்​தி​யா, நமீபி​யா, நெதர்​லாந்​து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணி​கள் இடம் பெற்றுள்ளன. இந்த அணி​கள் குறித்த பார்​வை..
இந்​தி​யா: நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி சூர்​யகு​மார் யாதவ் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. உலகக் கோப்பை தொடர்​களில் இந்​திய அணி ஒரு​போதும் சாம்​பியன் பட்டத்தை தக்​க​வைத்​தது இல்​லை. மேலும் டி 20 உலகக் கோப்பை வரலாற்​றில் தொடரை நடத்​தும் நாடு இது​வரை கோப்​பையை தக்​க​வைத்​ததும் கிடை​யாது. மேலும் எந்த அணி​யும் 3 முறை கோப்​பயை கைகளில் ஏந்​தி​யது இல்லை. ஆனால் இம்​முறை இந்த வரலாற்றை இந்​திய அணி மாற்றி எழுதக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.
2007 மற்​றும் 2024-ம் ஆண்​டு​களில் சாம்​பியன் பட்​டம் வென்ற இந்​திய அணி சமீபத்​திய ஐசிசி டி 20 தரவரிசையில் முதலிடம் வகிக்​கிறது. பேட்​டிங் ஆர்​டரில் 8-வது வரிசை வரை பேட்​ஸ்​மேன்​கள் இருப்​பது பெரிய பலமாக பார்க்​கப்​படு​கிறது. டாப் ஆர்​டரில் அபிஷேக் சர்மா எந்த வகையி​லான பந்​து​வீச்​சை​யும் வெளுத்து வாங்கக்​கூடிய வீர​ராக திகழ்​கிறார். சர்​வ​தேச டி 20 அரங்கில் 38 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அவர், 2 சதங்கள், 8 அரை சதங்​களு​டன் 1,297 ரன்​கள் குவித்துள்ளார். டி20 சர்​வ​தேச போட்​டிகளில் அவரது ஸ்டிரைக் ரேட் பிரம்​மாண்​டான வகை​யில் 194.74 ஆக உள்​ளது. இதனால் இம்​முறை டி 20 உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்​மா, பெரிய அளவில் தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய வீர​ராக திகழக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.இதே​போன்றே இஷான் கிஷனும் பேட்​டிங்​கில் மிரட்​டக்​கூடிய வீர​ராக உரு​வெடுத்​துள்​ளார். நியூஸிலாந்​துக்கு எதிரான கடைசி டி 20 போட்​டி​யில் அவர், 43 பந்​துகளில் 103 ரன்​களை விளாசி மிரட்​டி​யிருந்​தார்.
இஷான் கிஷனும், அபிஷேக் சர்​மா​வும் முதல் பந்​தில் இருந்தே அடித்து விளையாடும் திறனை கொண்​டிருப்​பது டாப் ஆர்​டருக்கு பெரிய பலமாக உள்​ளது.
இவர்​களு​டன் சஞ்சு சாம்​சனும் மட்​டையை சுழற்​றத் தொடங்​கி​னால் இந்​திய அணி அசுர பலம் பெறும். சூர்​யகு​மார் யாதவ், ஹர்​திக் பாண்​டி​யா, அக்​சர் படேல், ஷிவம் துபே, ரிங்கு சிங் ஆகியோ​ரும் ஆட்​டத்​தின் போக்கை தங்​களது அதிரடி​யால் எந்த நேரத்​தி​லும் மாற்றும் திறன் கொண்​ட​வர்​கள். காயத்​தில் இருந்து மீண்​டு​வந்​துள்ள திலக் வர்​மா​வும் அதிரடி ஆட்​டத்தை வெளிப்படுத்​து​வ​தில் சளைத்​தவர் இல்​லை.