சர்வதேச எழுத்தறிவு தினம்

புதுடெல்லி,செப். 8:
நமது பிரபஞ்சத்தில் நாம் பிறந்த தினம் தவிர்த்து- பொங்கல், புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்று பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் என ஆண்டின் 365 நாட்களில் 10 முதல் 15 நாட்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
கொண்டாட்டங்கள் அனைவருக்கும் பொதுவானது கிடையாது, என்ற போதிலும் உலகளவில் சிறப்பு தினங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருவது
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 08-ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அக்டோபர் 26, 1966-ம் ஆண்டு யுனெஸ்கோவின் 14-வது பொதுக்குழு கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 08-ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் சர்வதேச எழுத்தறிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
2011-ம் ஆண்டு நிலவரப்படி ஏழு வயதுக்கு மேற்பட்டோர், சிறிய தகவலை எழுதவும், படிக்கவும் தெரிந்து இருந்தால் அவர் எழுத்தறிவு பெற்றவராக கருதப்படுவார் என்று தேசிய புள்ளியியல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.