சளி, இருமல் மற்றும் குளிருக்கு வீட்டு மருந்து


குளிர் காலத்தில் சாமான்யமாக வரும் சளி இருமல் மற்றும் குளிர் காய்ச்சல் பிரச்சனைகள் மழைக்காலங்கள் வரை தொடரும். இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாதவகையில் மருத்துவமனைகள் நோக்கி படையெடுப்போரே அதிகம். ஆனால் நம் வீட்டு சமயலறைக்குள்ளேயே உள்ள சில பொருட்களை பயன்படுத்துவதால் இத்தகைய பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே பரிகாரம் காணமுடியும். இருமல் ஆரம்பிக்கும் போதே சற்று சூடான வெந்நீர் குடிப்பது உத்தமம். இதனால் தொண்டைகளின் எரிச்சல் குறையும். சில மூலிகை இலைகளின் கஷாயத்தை குடிப்பதாலும் இருமல் குறையும். ஒரு ஸ்பூன் தேனுடன் மிளகு தூளை சேர்த்து குடித்தாலும் சளி பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். உப்புடன் இஞ்சி மற்றும் லவங்கத்தை சேர்த்து மென்றாலும் சளி மற்றும் தொண்டை கர கரப்பை தவிர்க்கலாம் . எலுமிச்சைசாறு கல் சர்க்கரை மற்றும் மிளகை சேர்த்து கெட்டியான பாகு செய்து கொள்ளவும். இந்த பாகை தினமும் இரண்டு ஸ்பூன் அளவுக்கு உண்டு வந்தால் சளி குறைவதுடன் இருமல் பிரச்னையும் இல்லாததொழியும். இஞ்சியின் தேநீர் செய்து குடித்தாலும் சளி மற்றும் இருமலை தவிர்க்கலாம். ஒரு லோட்டா தண்ணீரில் இஞ்சி எலுமிச்சை சாறு மிளகு மற்றும் வெல்லம் போட்டு கொதிக்க விடவும். இதை சூடு ஆறும் முன்னரே குடித்தால் குளிர் மற்றும் சளி குறையும். சூடான நீரில் உப்பை சேர்த்து வாயில் ஊற்றி கொப்பளித்தாலும் தொண்டை வலி நீங்கும். இன்னும் உலர் இருமல் இருந்தால் ஏலக்காய் மற்றும் இஞ்சி பொடியை சேர்த்துக்கொண்டு குடிப்பதும் சளி , இருமல் மற்றும் குளிருக்கு மிகவும் நல்லது. அதே போல் அடிக்கடி நெல்லிக்காயை உண்டு வந்தாலும் சளி இருமல் குளிர் என அனைத்தையும் விட்டு விலகி இருக்க முடியும். சூடான பாலில் மஞ்சள் மற்றும் கல் சர்க்கரையை கலந்து இரவு உறங்கும் முன்னர் குடித்தாலும் சளி மற்றும் இருமல் இல்லாதொழியும். தேன் மற்றும் எலுமிச்சை சாறுடன் லவங்கத்தை சேர்த்து குடித்தாலும் சளி மற்றும் இருமல் தூரம் விலகிச்சென்றுவிடும். இருமல் ஏற்படும்போது கல் சர்க்கரை மற்றும் லவங்கத்தை சேர்த்து உட்கொண்டாலும் பிரச்சனைகள் தீரும்.