சவுதி இளவரசர் ஆலோசனை

ரியாத்: அக்.13-
பாலஸ்தீனத்துக்கு எதிரான போர் குற்றங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, காசா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 5 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் விமானப்படை நடத்திய குண்டு வீச்சில் காசா நகரில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.
வான் தாக்குதலுக்கு பயந்து காசா நகரில் உள்ள மக்கள் தங்கள்உடமைகளுடன் , ஐ.நா. பள்ளிகள் உட்பட பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கின்றனர். பேக்கரிகள் மற்றும் பலசரக்கு கடைகளில் மக்கள் கூட்டம் அலைபோதுகிறது. பேக்கரிகளில் எரிபொருள் மற்றும் மின்சாரம் இல்லாததால், அவைகள் திறந்த சில மணி நேரங்களிலேயே மூடப்படுகின்றன.

காசா பகுதிக்குள் உணவு, தண்ணீர், எரிபொருள், மருந்துகள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தி விட்டது. காசா நகரில் இருந்த ஒரே மின் நிலையமும், எரிபொருள் இன்றி மூடப்பட்டுவிட்டது. இதனால காசா நகர் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின் பற்றாக்குறை மருத்துவமனைகளின் செயல்பாட்டை முடக்கும் என செஞ்சிலுவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.