சாக்கலேட் குளிர் காபி

தேவையான பொருட்கள்
ஒரு ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பொடி
ஒரு ஸ்பூன் கொக்கோ பொடி
இரண்டு ஸ்பூன் சூடு நீர்
ஒரு கப் பால்
ஒரு ஸ்பூன் வெண்ணிலா ஐஸ் க்ரீம்
இரண்டு ஸ்பூன் சாக்கலேட் சாஸ்
ஒரு ஸ்பூன் சர்க்கரை
ஆறு துண்டு ஐஸ்
சாக்கலேட் சாஸ்
அலங்கரிக்க பால் ஏடு
செய்யும் முறை-
முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பொடி மற்றும் ஒரு ஸ்பூன் கொக்கோ பொடியை எடுத்து கொள்ளவும். இதை இரண்டு ஸ்பூன் வெந்நீரில் கலக்கவும் . கொக்கோ மற்றும் காபி டிகேஷனை ப்ளெண்டரில் ஊற்றி அப்படியே ஒரு கப் பால் ஒரு ஸ்பூன் வெனிலா ஐஸ் கிரீம் மற்றும் இரண்டு ஸ்பூன் சாக்கலேட் சாஸ் சேர்க்கவும் . பின்னர் ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஆறு துண்டு ஐஸ்களை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை மில்க் ஷேக் வகையில் நுரைவரும் வரையில் கலக்கவும். பின்னர் இன்னும் என்ன யோசனை பல பல வெளிநாடுகளில் நீங்கள் வெறும் திரைகளில் பார்த்து ரசித்த சாக்கலேட் குளிர் காபி .இதோ இப்போது உங்கள வீட்டிலேயே தயாராக உள்ளது.