சாண்ட்ரோ ரவியிடம் தீவிர விசாரணை

மைசூர் : ஜனவரி. 14 – குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தில் சிக்கியுள்ள சாண்ட்ரோ ரவி என்ற மஞ்சுநாத்தை நகருக்கு அழைத்து வந்துள்ள போலீசார் அவனிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . கைது செய்து நகருக்கு அழைத்து வந்துள்ள சாண்ட்ரோ ரவியிடம் போலீசார் முதல் கட்ட விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் தங்கள் வசம் எடுத்துள்ள போலீசார் அவனிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்து வருகின்றனர். கொடூர குற்றவாளியாக உள்ள சாண்ட்ரோ ரவி விபச்சாரம் முதல் இளம்பெண்களை கடத்துவது உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளான் . திருமணம் ,வேலைவாய்ப்பு மற்றும் வேறு பல ஆசைகளை மூட்டி பல இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடு படுத்தி வந்துள்ளான் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கே எஸ் மஞ்சுநாத் என்ற சாண்ட்ரோ ரவி மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவன். இவனுடைய தந்தை காலால் துறை அதிகாரியாயிருந்தவர். மண்டியாவில் இருந்தபோதே இவன் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளான். பின்னர் தன்னுடைய நடவடிக்கைகளை மைசூருக்கு மாற்றிகொண்டுள்ளான் . இவனுக்கு எதிராக 1995 முதல் இன்று வரை மைசூர் , பெங்களூர் , மண்டியா ஆகிய இடங்களில் 22 புகார்கள் பதிவாகியுள்ளன. 2005ல் பெங்களூர் போலீசாரிடம் இவன் சிக்கி இருப்பதுடன் அப்போது சிறைக்கும் சென்று வந்துள்ளான். இவனுக்கு எதிராக குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவாகியிருப்பதுடன் இவன் சிறையில் இருந்த போதே பல்வேறு குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருந்தான். திருமணம் , வேலை வாய்ப்பு என பல ஆசைகளை காட்டி பல இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளான். இதற்கிடையில் இவன் தன்னுடைய சாண்ட்ரோ காரையே அதிகளவிலான குற்றங்களுக்கு பயன்படுத்திவந்துள்ளான். இதனாலேயே இவனுக்கு சாண்ட்ரோ ரவி என்ற புனை பெயர் வைக்கப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில் அரசியல்வாதிகள் , ஐ ஏ எஸ் , ஐ பி எஸ் அதிகாரிகள் , ஆகியோரின் தொடர்பை வளர்த்துக்கொண்டு இளம் பெண்களை கடத்தும் விஷயத்திலும் ஈடுபட்டு வந்துள்ளான். பெங்களூரின் குமாரகிருபா விருந்தினர் மாளிகையிலேயே மாத கணக்கில் தங்கி இவன் தன் விவகாரங்களை நடத்தி வந்துள்ளான். தவிர தன்னுடைய சட்ட விரோத செயல்கள் வாயிலாக கோடி கணக்கில் பணம் சம்பாதித்து பல சொத்துக்களை வாங்கி குவித்துள்ளான். என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.