சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை: ஆர்எஸ்எஸ் விளக்கம்

புதுடெல்லி: டிச. 22-
“சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை அது வெறும் அரசியல் ஆதாயத்துக்கானதாக இருந்துவிடக் கூடாது என்றே கூறுகிறோம்” என ஆர்எஸ்எஸ் விளக்கமளித்துள்ளது.
முன்னதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவரான ஸ்ரீதர் கட்கே கடந்த 19 ஆம் தேதி பேசுகையில், “சாதிவாரி கணக்கெடுப்பு சிலருக்கு அரசியல் ரீதியாக ஆதாயம் அளிக்கலாம். சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அரசியல் கட்சிகளால் தங்களுக்கு
சாதகமான வாக்குவங்கி என்னவென்பதைத் தெரிந்துகொள்ள இயலும். ஆனால், இத்தகைய கணக்கெடுப்பு சமூகத்துக்கோ, தேசிய ஒருமைப்பாட்டுக்கோ எவ்வித நன்மையும் பயக்காது” எனக் கூறியிருந்தார்.
இது சர்ச்சையான நிலையில் தற்போது ஆர் எஸ் எஸ் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் பல சமூகங்கள் பொருளாதார,
கல்வி எனப் பல படிநிலைகளில் பின்தங்கிவிட்டன. அரசாங்கங்களும் அத்தகைய பின் தங்கிய சமூகத்தின் வளர்ச்சிக்காக அவர்களுக்கு அதிகாரமளித்தலுக்காக பல நன்மைகளை செய்துவருகின்றன.