சான்ட்ரோ ரவியிடம் தொடர்ந்து விசாரணை

பெங்களூரு:- ஜனவரி. 19 – ரகசிய இடத்தில் வைத்து விசாரணை பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த பிரபல விபசார கும்பல் தலைவன் மஞ்சுநாத் என்கிற சான்ட்ரோ ரவியை அவரது 2-வது மனைவி அளித்த புகாரின்பேரில் மைசூரு விஜயநகர் போலீசார் கைது செய்து இருந்தனர். கைதான சான்ட்ரோ ரவி அரசியல் பிரமுகர்கள் இளம்பெண்களை சப்ளை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. சான்ட்ரோ ரவி கடந்த 1995-ம் ஆண்டு முதலே குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனால் சான்ட்ரோ ரவி வழக்கை சி.ஐ.டி. போலீசாரிடம் மாநில அரசு ஒப்படைத்து உள்ளது. அவரிடம் மைசூருவில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடிகள் மூலம் லஞ்சம் வசூல் இதற்கிடையே சான்ட்ரோ ரவி கொடுத்த பொய் புகாரின்பேரில் அவரது 2-வது மனைவியை கைது செய்ததாக பெங்களூரு காட்டன்பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிரவீன் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் பிரவீன் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இன்ஸ்பெக்டர் பிரவீன் பெலகாவியை சேர்ந்தவர்.
அவரது தந்தை கர்நாடக போலீசில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆவார். கடந்த 2008-ம் ஆண்டு பிரவீன் சப்-இன்ஸ்பெக்டராக போலீஸ் வேலைக்கு சேர்ந்து இருந்தார். பின்னர் அவர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று இருந்தார். வில்சன் கார்டன் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய போது ரவுடிகள் மூலம் அவர் லஞ்சம் வசூலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சம்பங்கிராம்நகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போதும் ரவுடிகள் மூலம் அவர் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இளம்பெண்ணை கர்ப்பமாக்கினார் இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண் ஒருவருடன் பிரவீனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து அவரை பிரவீன் கர்ப்பமாக்கி உள்ளார். பின்னர் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்து உள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளிக்க முயன்று உள்ளார். அப்போது தற்கொலைக்கு முயன்று அந்த இளம்பெண்ணை போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளிக்கவிடாமல் பிரவீன் தடுத்து நிறுத்தியதும் தெரியவந்து உள்ளது. இந்த நிலையில் காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பிரவீன் காட்டன்பேட்டையில் உள்ள 2 ஆயிரம் லாட்ஜிகளில் இருந்து பணம் வசூலித்து வந்து உள்ளார். இதனால் அவர் காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்து இருந்தார். பொய் வழக்கு இந்த சந்தர்ப்பத்தில் தான் அவருக்கு சான்ட்ரோ ரவியின் பழக்கம் கிடைத்து உள்ளது. பிரவீனிடம், சான்ட்ரோ ரவி எனக்கு அரசியல் பிரமுகர்களை தெரியும். இதனால் காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து உனக்கு இடமாற்றம் கிடைக்காமல் பார்த்து கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். பின்னர் சான்ட்ரோ ரவி கொடுத்த பொய் புகாரில் அவரது 2-வது மனைவி மீது பிரவீன் பொய் வழக்குப்பதிவு செய்ததும் தெரியவந்து உள்ளது. மேலும் சான்ட்ரோ ரவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பிரவீன் செய்து கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.