சாமுண்டி மலையில் இரவில் வாகனங்கள் நுழைய தடை

மைசூரு, ஆக. 22: சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க சாமுண்டி மலையில் இரவில் வாகனங்கள் நுழைய தடை விதிக்க‌ப்பட்டுள்ளது
மைசூரில் புகழ்பெற்ற சாமுண்டி மலையில் ஏற விரும்பும் இரவுநேரப் பயணிகள் தங்கள் திட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மலைப்பாதையில் பயணம் செய்ய வனத்துறை தடை விதித்துள்ளது. பொது மக்கள் விருந்து உள்ளிட்டவைகளுக்கு இரவு நேரங்களில் மலைப்பகுதிக்கு செல்வதாகவும், பலர் இரவை காட்டுப்பகுதியில் கழிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இரவு நேரங்களில் சாமுண்டி மலைக்கு பயணம் செய்வது தடைசெய்யப்படும், உத்தரவுகளை மீறும் நபர்கள் அபராதம் விதிக்கப்படும் என்று மைசூரு கோட்ட துணை வனப் பாதுகாவலர் டாக்டர் கே.என்.பசவராஜா தெரிவித்தார். மேலும், செப்டம்பர் 1 முதல், இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு தருமாறு பொதுமக்களிடமிருந்து கேட்டுக்கொள்கிறோம் என்றார்.