சாமுண்டி மலையில் நடந்த யோகா: அமைச்சர் பங்கேற்பு

மைசூரு, அக். 13- கூட்டுறவு அமைச்சர் மற்றும் மைசூரு மற்றும் சாமராஜநகர் பொறுப்பு அமைச்சருமான எஸ் டி சோமசேகர் இன்று காலை துர்கா வந்தனம் செய்வதன் வாயிலாக யோகம் செய்துகொண்டிருப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். ஸ்ரீ பதாஞ்சலி யோகா கல்வி மைய்யம் சார்பில் காலை 6 மணி முதல் 7 மணி வரை சாமுண்டி மலையில் துர்காஷ்டமி நாளான இன்று ஏற்பாடு செய்திருந்த சமூக துர்க்கா வந்தனம் நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கு கொண்டார். அக்னிகுண்டத்திற்கு அட்சதை , மலர்கள் தூவியதன் வாயிலாக நிகழ்ச்சியை துவங்கி வைத்த அமைச்சர் பின்னர் பேசுகையில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டு சமூக நல பணிகளில் ஈடுபட்டு வரும் எஸ் பி வொய் சி சி நிறுவனத்தின் தொண்டுகள் பாராட்டுக்குரியவை. எவ்வித விளமபரமும் இன்றி இலவசமாக நிகழ்ச்சிகள் அளித்துவரும் இந்த மையம் மற்றும் அனைவருக்கும் தாய் சாமுண்டீஸ்வரி நல்லதையே செய்யட்டும் என நல்லாசி கூறினார். இந்த நிகழ்ச்சியில் மூடா தலைவர் ராஜீவ் , கூட்டுறவு அமைச்சரின் சிறப்பு செயலாளர் தினேஷ் கூலி கௌடா மற்றும் எஸ் பி வொய் சி சி நிறுவன தலைவர் கோபால கிருஷ்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.