சாம்ராஜ்நகரில் அங்கப் பிரதட்சணம்

சாம்ராஜ்நகர், செப். 29: சாம்ராஜ்நகரில் காவேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விடுவதை கண்டித்து சட்டை இல்லாமல் அங்கப்பிரதட்சணத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
காவேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விடுவதை கண்டித்து கர்நாடக பந்த் பின்னணி சாமராஜ்நகரில் கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் கன்னட ஆதரவாளர்கள் தேசிய நெடுஞ்சாலை செல்லும் புவனேஸ்வரி வட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் சாலை மறியல் செய்து தமிழ்நாட்டிற்கு மற்றும் மாநில அரசுக்கு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கன்னட ஆதரவுப் போராளி ஸ்ரீனிவாச கவுடா தலைமையில் விவசாயி தலைவர் ஹல்லிகெரெஹுண்டி பாக்யராஜ், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, தேசிய நெடுஞ்சாலையில் அங்கப்பிரதட்சணத்தில் ஈடுபட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டிற்கு காவேரியிலிருந்து தண்ணீர் விட வலியுறுத்தியதை கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமை பெங்களூரு, ராம்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பந்த் நடைபெற்றது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாநில அளவில் கன்னட செலுவளி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பந்த் நடத்த அழைப்பு விடுத்தன. இதனையடுத்து இன்று மாநில பந்த் நடைப்பெறுகிறது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.