சாம்ராஜ்பேட்டை தொகுதியில்இரண்டு கோடி ரூபாய் பறிமுதல்

xr:d:DAFhY5Sj-jU:3,j:46069461694,t:23042811

பெங்களூரு, ஏப். 22- சாமராஜ்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, பா.ஜ., மாநில பிரிவு அலுவலக செயலாளர் லோகேஷ் அம்பேகல்லு உட்பட, மூன்று பேர் மீது, காட்டன்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் சனிக்கிழமை இரவு ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது 2 கோடி ரூபாய் கண்டறியப்பட்டது.
காரில் இருந்தவர் இது பிஜேபி மாநில பிரிவு அலுவலகத்திற்கு சொந்தமானது என ஆவணம் அளித்துள்ளார். பின்னர் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து வருமான வரித்துறை இடம் ஒப்படைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க கூறினர்.
அந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் இருப்பதாக வருமான வரி சட்டத்தை மீறவில்லை என தேர்தல் அதிகாரிகளும் ஐ.டி., அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் தேர்தல் அதிகாரிகளிடம் பணத்தை திருப்பி அளித்தனர். அதை சம்பந்தப்பட்ட நபர்களிடம் தேர்தல் அதிகாரி திருப்பி அனுப்பினார். பின்னர் மத்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறியதாக கூறி நீதிமன்ற அனுமதியுடன் தேர்தல் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்தார். காரில் பிஜேபி மாநில அலுவலகத்தில் இருந்து வந்த கடிதம் வங்கியில் இருந்து காசோலைகள் மூலம் பணம் எடுக்கப்பட்டு கட்சியினருக்கு அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஐ.டி., அதிகாரிகள் சோதனை செய்ததில் வருமான வரி மோசடி ஏதும் நடைபெறவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா தெரிவித்துள்ளார். தேர்தலின் போது முகவர் செலவுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக கொடுக்க முடியாது அதிக தொகை இருந்தால் காசோலை அல்லது ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். காட்டன் பேட்டை போலீஸ் நிலைய வழக்கில் கமிஷன் விதிகளை மீறி பிஜேபி மேலும் பயனாளிகள் பட்டியலிலும் வழங்கப்படவில்லை. தேர்தல் முறைகேடுகளுக்கு பணத்தை பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் ஐபிசியின் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.நகரின் காட்டன் பேட்டையில் 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சட்ட விரோதமாக கடத்தப்பட்ட பணத்தை மேலும் 4 மணி நேரத்தில் பிஜேபிக்கு திருப்பி அனுப்பிய விவகாரத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை கேபிசிசி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா-“ கைப்பற்ற பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளும் தேர்தல் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.கைப்பற்றப்பட்ட பணத்துக்கு மின்னல் வேகத்தில் கிளீன் சீட் வழங்குவது ஜனநாயகத்தின் மீதான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்” என்றார். ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் பரிவர்த்தனைகள் வங்கி கணக்கு அல்லது காசோலைகள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று சட்டம் உள்ளது. தேர்தலின் போது 20,000 மேற்பட்ட பண பரிவர்த்தனைகளை சட்டத்தை மீறி ரெண்டு கோடி ரூபாய் பரிமாற்றம் செய்வது பணமோசடி அல்லவா என அவர் கேள்வி எழுப்பினார். சிக்கிய பணத்தை சில ஆவணங்களை காட்டி விடுவித்தால் தேர்தலின் புனிதத்தை எப்படி காப்பாற்ற முடியும். அதே வழியில் பணம் மூலம் பரிவர்த்தனை செய்ய எங்கள் அனுமதிப்பீர்களா இந்த கோல்மால் வழக்கில் நியாயமான விசாரணை வேண்டும் என்று அவர் கோரினார்.