சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி

டெல்லி ஜன.11-
மொத்தம் ரூ.10¼ கோடி பரிசுத்தொகைக்கான மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது.
இதன் பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் காமன்வெல்த் சாம்பியனான இந்தியாவின் சாய்னா நேவால் 12-21, 21-17, 12-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹன் யூவிடம் போராடி தோல்வி அடைந்தார். இன்று களம் இறங்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து முதல் சுற்றில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினுடன் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்துகிறார்.