சார்மினார் விரைவுரயில் தடம் புரண்டு விபத்து

ஹைதராபாத் ஜனவரி 10-
சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது இதில் ஐந்து பயணிகள் காயம் அடைந்தனர் இன்று காலை இந்த விபத்து நடந்தது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே வந்து கொண்டிருந்த சார்மினார் விரைவு ரெயில் இன்று காலை தடம் புரண்டது.
இந்த விபத்தில் ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. இந்த விரைவு ரெயில் தடம் புரண்ட விபத்தில் 5க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்த பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தடம் புரண்ட பெட்டியை மீட்கும் பணியில் ரெயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ரெயில் விபத்து காரணமாக ஆங்காங்கே ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது ரயில் பயணிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர் இன்று நடந்த இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் விபத்துக்கான காரணம் என்ன என்று நிர்வாக ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது