
பெங்களூர், அக். 4-
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய
சாலமர திம்மக்கா மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சாலமர திம்மக்கா ஹாசன் மாவட்டம், பேலூர் அருகே பெள்ளூரில் வசித்து வந்தவர் .இவருக்கு வயது 111. இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ரெண்டு நாட்களாக மூச்சு திணறல் ஏற்பட்டது. நேற்று மதியம் பாதிப்பு அதிகமானதால் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருக்கு கொண்டுவரப்பட்டு ஜெயநகர் அப்பல்லோ மருத்துவமனையில் சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் .இவர் உடல்நல பாதிப்பு குறித்து, அவரின் வளர்ப்பு மகன் உமேஷ் பெள்ளூர் கூறுகையில், திம்மக்கா மஞ்சுநாத் நகரில் இருந்தபோது, கால் தவறி கீழே விழுந்தார். அப்போது எலும்பு முறிவு ஏற்பட்டது. உடல் நலம் சீரானதும் வீடு திரும்பினார்.அவருக்கு 40 வயது ஆகும் வரை குழந்தை பாக்கியம் இல்லை. இதன் காரணத்தால் கனவுருடன் சேர்ந்து ஆலமரத்தை நட்டு வைக்கும் பணியில் ஈடுபட்டார். குழந்தை போல் வளர்த்து வந்தார். முதல் வருடம் நான்கு கிலோமீட்டர் தூரம் இருபுறமும் பத்து மரக்கன்றுகளை நட்டு குழந்தை போல் பாதுகாத்து வளர்த்து வந்தார். அவர் கணவருடன் இதுவரை 8,000 அதிகமான மரங்களை வளர்த்து வந்துள்ளார். இவருக்கு பத்மஸ்ரீ தேசிய விருது 2019 கிடைத்தது. சுற்றுப்புற சூழல் கல்விக்கு இவர் பெயரை சூட்டி உள்ளனர். மாநிலத்தின் பெருமையை உலகளவு பரப்பியவர் இவர்.