சாலைக் குழியை மூடிய போக்குவரத்து போலீசார்

பெங்களூரு, அக். 2: சாலையில் ஏற்பட்டிருந்த குழியை போக்குவரத்து போலீசார் மூடியது பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.பெங்களூரின் வெளிவட்ட சாலையில் உள்ள குழிகளை போக்குவரத்து போலீசார் மூடினர். இந்த பணியை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.
சாலையில் உள்ள குழிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் குறைந்த வேகத்தில் செலவ‌தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எச்எஸ்ஆர் லேஅவுட் போக்குவரத்து போலீசார், குழிகளால் சீரான போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததைக் கண்டறிந்து, சிமென்ட் கலந்த ஜல்லி கற்களை கொண்டு குழிகளை மூடினர்.“27வது பிரதான சாலை மற்றும் ஆக்ரா கீழ்ப்பாலம் சாலை முழுவதும் குழிகள் நிறைந்திருந்தன. இதுகுறித்து சாலை பராமரிப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் சீரமைக்கவில்லை. இதனால், போக்குவரத்து போலீசார், தாங்களே முன் வந்து சாலையில் இருந்த குழிகளை மூடினர் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.
சாலையில் உள்ள குழிகளை போலீசார் மூடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை ஷேர் செய்த பொதுமக்கள், பெங்களூரு மாநகராட்சி மற்றும் மற்ற‌ துறை அதிகாரிகள் செய்யாததை போலீசார் செய்துள்ளது பாராட்டுதலுக்குரியது என அதில் பதிவிட்டுள்ளனர்.