சாலையில் அனாதையாக திரிந்த 2 வயது சிறுவன்

சூளகிரி, அக்.18-
சூளகிரி அருகே சாலையில் 2 வயது சிறுவன் அனாதையாக நின்றுள்ளான். இது குறித்த விவரமாவது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குண்டகுறிக்கி டயோடா கார் கம்பெனி உள்ளது. அதன் அருகே உள்ள சாலையில் இன்று காலை 2 வயது சிறுவன் அனாதையாக நடந்து வந்துள்ளான். அவன் அருகே யாரும் இல்லாததால் அவனை பொதுமக்கள் மீட்டனர். தனியாக வெகு நேரம் நின்றதால் சிறுவன் அழுதபடி இருந்துள்ளான். அவனக்கு தண்ணீர், பால் மற்றும் ரொட்டி வாங்கி கொடுத்து அக்கம்பக்கத்தில் யாராவது உறவினர்கள் உள்ளார்களா என விசாரித்துள்ளனர்.ஆனால் யாரும் தங்கள் குழந்தை இல்லை என கூறியுள்ளனர்.சிறுவனை மீட்ட பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் வைத்துள்ளனர். காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.