சாலையில் சாப்ட்வேர் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

பெங்களூரு, ஆக. 8-
சாலையில் மோட்டார் சைக்கிளுக்கு இடம் கொடுக்காததால் ஆத்திரமடைந்து சாப்ட்வேர் ஊழியரின் காரை தடுத்து நிறுத்தி அவரை தாக்கிய தனியார் விளையாட்டுப் பயிற்சி மைய டென்னிஸ் பயிற்சியாளர் மற்றும் அவரது நண்பரை ஒயிட்பீல்டு போலீஸார் கைது செய்தனர். நல்லூரஹள்ளியைச் சேர்ந்த முரளி, ரகு ஆகியோர் கைது கைது செய்யப்பட்டு உள்ளனர் இவர்கள்.ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஒயிட்ஃபீல்டில் உள்ள வைதேஹி மருத்துவமனையில் இருந்து வர்தூர் அருகே உள்ள தங்கள் வீட்டிற்கு ராம்கொண்டனஹள்ளி எச்ஏஎல் மெயின் ரோட்டில் சென்றனர் அப்போது அதே சாலையில் காரில் பயணித்த சாப்ட்வேர் ஊழியர் பிரியந்தத் இவர்களுக்கு வழி விடவில்லை என்று இவர்கள் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இந்த சம்பவத்தின் வீடியோவை சாப்ட்வேர் ஊழியர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான குழுவினர் வீடியோவின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒயிட்பீல்டு அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரியந்தத்தா, வர்தூர் அருகே மதுராவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வக்கீலான தனது மனைவி லலிதாவுடன் பணி நிமித்தமாக தத்தா ஆகஸ்ட் 5ஆம் தேதி ஒயிட்ஃபீல்டுக்கு சென்றுள்ளார். அங்கு பணியை முடித்துவிட்டு தம்பதி இருவரும் எச்ஏஎல் மெயின் ரோட்டில் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த முரளி, ரகு ஆகியோர் நடுரோட்டில் நல்லூரஹள்ளி அருகே தத்தாவின் காரை முந்திச் செல்ல முயன்றனர்.
ஆனால், அப்போது தங்களுக்கு வழி விடாததால கோபமடைந்த குற்றவாளிகள், சிறிது தூரம் சென்றதும் பிரியந்தத்தாவை தடுத்து நிறுத்தினர். அதன்பின் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து காரில் இருந்து இறங்குமாறு கூறினர். இந்த மிரட்டலுக்கு பயந்த தத்தா காரை விட்டு இறங்க மறுத்துவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தத்தா தம்பதியினரை கல்லெறிந்து கொன்று விடுவதாக மிரட்டினர். இந்த சலசலப்பை பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து தத்தா தம்பதியை மீட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது