சாலையில் நின்று இருந்தவர்கள் மீது மோதிய பஸ் – 15 பேர் காயம்

ராய்ச்சூர் : செப்டம்பர். 24 – சாலையின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது போக்குவரத்து பஸ் மோதியதன் விளைவாய் 15க்கும் மேற்பட்ட பயணியர் காயமடடைந்துள்ள சம்பவம் ராய்ச்சூர் மாவட்டத்தின் சிந்தசூரு தாலூகாவின் மல்லதகுட்டா என்ற கிராமத்தில் நடந்துள்ளது . நேற்று இரவு பஸ் சித்தனூரிலிருந்து அண்களிமட்ட மார்கமாக சென்றுகொண்டிருந்தபோது வழியில் இந்த விபத்து நடந்துள்ளது . லாரி ஒன்று பஞ்சராகி சாலையின் ஓரத்தில் நின்றிருந்தது . ஆனால் இரவு நேரத்தில் லாரி நின்றிருப்பது குறித்து இண்டிகேட்டர் போட்டிருக்கவில்லை . இந்த நிலையில் இருளில் எதிரில் வந்த மோட்டார் சைக்கிளை தவிர்க்கும் நோக்கில் பஸ் ஓட்டுநர் சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது மோதியுள்ளார் . இந்த விபத்தால் பஸ்ஸில் இருந்த 15க்கும் மேற்பட்டோர் காயங்களடைந்திருப்பதுடன் இவர்கள் அனைவரையும் ஆம்புலன்ஸ் வாயிலாக அருகில் உள்ள மருத்துவமனை மற்றும் ராய்ச்சூர் மற்றும் பெல்லாரி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். . சம்பவ இடத்திற்கு சிந்தநூறு போக்குவரத்து போலீசார் நேரில் வந்து ஆய்வு செய்து வருகின்றனர் . இதே போல் சாலையை கடக்க நின்றிருந்த மோட்டார் சைக்கிள் மீது பஸ் ஒன்று வேகமாக மோதியதில் இரண்டு பேர் காயமடைந்துள்ள சம்பவம் மங்களூர் நகரின் தேசிய நெடுஞசாலை 66 சுரத்கள் ஹொசபேட்டு அருகில் நடந்துள்ளது. இந்த மோதல் காட்சி அருகில் உள்ள சி சி டி வி காட்சிகளில் பதிவாகி அவை தற்போது வைரலாகிவருகின்றன. காலை 7.55 மணியளவில் தனியார் அதிவிரைவு பஸ் ஒன்று வேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பைக்கில் இருந்த காதர் அர்பான் மற்றும் இந்திரா நகரை சேர்ந்த அமீர் சஹீல் ஆகியோர் படுகாயமடைந்திருப்பதுடன் இவர்கள் தற்போது இங்குள்ள ஏ ஜெ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்கள் . பஸ் ஓட்டுநர் டெல்சன் காசினோ என்பவருக்கு எதிராக மங்களூர் வடக்கு பிரிவு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.