சாலையில் வாகனங்களை அடித்து நொறுக்கிய 6 பேர் கைது

பெங்களூர் : நவம்பர் , 16 – குரங்கு குல்லாய் அணிந்து சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வானங்களை நாசப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஆறு பேரை ராஜகோபால்நகர் போலீசார் கைது செய்துள்ளனர். லக்கரே அருகில் மோட்டார் சைக்கிள்களில் மூச்சு முட்ட குடித்துவிட்டு வீச்சரிவாள் மற்றும் இரும்பு கம்பிகளுடன் வந்த குற்றவாளிகள் 15 கார்களின் கண்ணாடிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நாசப்படுத்திவிட்டு தப்பியோடியிருந்தனர். சம்பவம் நடந்த இடத்தின் அருகில் இருந்த சி சி டி வி காட்சிகள் , மற்றும் அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் வெவேறு இடங்களில் பதுங்கியிருந்த ஆறு பேரை கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர். குற்றவாளிகள் ஏரியாவில் வன்முறை நடத்தி தங்கள் மீது பயம் வருவதெற்கென இத்தகைய செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர். என டி சி பி எஸ் கிரீஷ் தெரிவித்துள்ளார். இதே போல் வஜ்ரல் பார் என்ற கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ள திருடர்கள் கல்லாவில் இருந்து பணத்தை கொள்ளையடித்து தப்பியோடியுள்ள சம்பவம் நகரின் புறப்பகுதியில் அனேகல்லின் திருபாள்யா என்ற இடத்தில் நடந்துள்ளது. நேற்று நள்ளிரவு பார் அருகில் வந்த திருடர்கள் மூன்று பேரில் இரண்டு பேர் வெளியில் தகவல் தெரிவிக்க நின்றிருந்த நிலையில் ஒருவன் மட்டும் பாருக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடித்து தப்பியோடியுள்ளனர். இந்த பாரில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான ரொக்கம் இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த திருட்டு சி சி டி வியில் பதிவாகியுள்ள நிலையில் இந்த திருட்டு குறித்து ஹேப்பகோடி போலீஸ் நியாயத்தில் வழக்கு பதிவாகி போலீசார் தற்போது குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.