சாலையை கடக்க முயன்ற 5 பேர் பலி

பொத்தேரி ஆகஸ்ட் 11- செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த நபர்களை அடையாளம் காணும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சாலை விபத்திற்கு காரணமான லாரி டிரைவர் தலைமறைவாகியுள்ளார்.