சாலை குழியில் விழுந்து சிறுமி சாவு

.சிவமொக்கா : நவம்பர். 8 – ரயில்வே பணிக்காக சாலை நடுவில் தோண்டப்பட்டிருந்த குழியில் விழுந்து சிறுமி ஒருவள் இறந்துள்ள சம்பவம் கோட்டிகங்கூறி என்ற இடத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த சிறுமி சைத்ரா (10) என்பவள் இந்த சம்பவத்தில் உயிரிழிந்தவர். இவள் ஐந்தாம் வகுப்பு படித்து வந்திருந்த நிலையில் பள்ளி கூடம் முடித்து நேற்று மாலை வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்துள்ளாள் . இந்த நேரத்தில் அவளுடைய பெற்றோர் வீட்டுக்கு பூட்டு போட்டு விட்டு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். சிறுமி நிலத்திற்கு சென்று பெற்றோரிடமிருந்து சாவியை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது சாலையில் ரயில்வே பணிக்காக தோண்டப்பட்டிருந்த குழுயில் விழுந்துள்ளாள். தொடர்ந்து மாநிலத்தில் பெய்து வரும் மழையால் குழியில் தண்ணீர் நிறைந்திருந்த நிலையில் சைத்ராவால் மேலே வர முடியவில்லை . பின்னர் நிலத்தில் வேலை முடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பிய இவளுடைய பெற்றோர் மகளை தேடியுள்ளனர் . அப்போது சாலை குழியில் சைத்ரா பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளாள் . சாலை நடுவில் குழியை தோண்டி எவ்வித முன் எச்சரிக்கை அறிவிப்பு மற்றும் பலகை வைக்காமல் இருந்ததே சைத்ராவின் சாவிற்கு காரணம் என உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு காரணமான குத்தகையாளருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இறந்து போன சைத்ராவின் குடும்பத்திற்கு தகுந்த நிவாரணம் வேண்டும் என்றும் கிராம மக்கள் வற்புறுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிவமொக்கா கிராமாந்தர போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.