சாலை தடுப்பில் கார் மோதி 7 பேர் பரிதாப சாவு

தாவணகெரே, ஜனவரி. 14 –
வேகமாக சென்றுகொண்டிருந்த இண்டிகா கார் ஒன்று சாலை தடுப்பின் மோதியதில் ஏழு பேர் இறந்துள்ள சம்பவம் ஜகளூரு தாலூகாவின் தேசிய நெடுஞசாலை 13 ல் உள்ள சோதனை சாவடி அருகில் இன்று அதிகாலை நடந்துள்ளது இறந்தவர்கள் மல்லான கௌடா (22) , சந்தோஷ் (21) , சஞ்சீவ் (20) , ஜைபீம் (18) , ரகு (23) சித்தேஷ் (20) மற்றும் வேதமூர்த்தி (18 ) என தெரிய வந்துள்ளது. இறந்தவர்களில் நான்கு பேர் யாதகிரியின் ஷகாபுரத்தை சேர்ந்தவர்கள் . இரண்டு பேர் விஜயநகர மாவட்டத்தின் கூட்லகி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் விஜயபுரா மாவட்டத்தின் தாலிக்கோட்டே பகுதியை சேர்ந்தவர். கார் மோதிய வேகத்தில் ஆறு பேர் அதே இடத்தில் உயிர் இழந்ததுடன் மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துளார். இந்த விபத்துக்கு காரணமான காரை ஒட்டி வந்தவர் மது அருந்தி இருந்ததாகவும் தூக்க கலக்கத்தில் இருந்ததாகவும் அதனால் மயக்கத்தில் காரை சாலை தடுப்பு மீது மோதியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்களின் உடல்கள் ஜகளூரு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.