சாலை தடுப்பு மீது அமர்ந்து இருந்த4 இளைஞர்கள் லாரி மோதி பலி

விஜயபுரா : அக்டோபர் . 18 – நகரின் புறப்பகுதியில் கொடூர விபத்து நடந்துள்ளதில் வேகமாக வந்த லாரி ஒன்று சாலை தடுப்பு மீது உற்கார்ந்திருந்த நான்கு இளைஞர்கள் மீது எறியதில் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர் . நகரின் வஜ்ரஹனுமான் பகுதியில் சிவானந்த சவுத்திரி (25) , சுனில் கானபூரா (26) , ஈரண்ணா கோலாரா (26) மற்றும் பிரவீன் பாட்டில் (30) ஆகியோர் இந்த கொடூர விபத்தில் உயிரிழந்தவர்கள்.தேசிய நெடுஞசாலை 50ல் ஹிட்டல்லி டோல் வாகா அருகில் ட்ராக் பை லைன் அருகில் நேற்று நள்ளிரவு இந்த விபத்து நடந்துள்ளது . இங்குள்ள சர்வீஸ் வீதியின் சாலை தடுப்பு மீது நான்கு பேரும் உட்கார்ந்திருந்தபோது வேகமாக வந்த எமன் லாரி இவர்கள் மீது எறியதில் நான்கு பேரும் அதே இடத்தில் இறந்துள்ளனர் . நான்கு பேர் மீது மோதி உயிரிழக்க செய்த வாகனத்தின் ஓட்டுநர் தப்பியோடியுளான் . இளைஞ்சர்கள் டோல் வாக்க அருகில் உள்ள தாபாவில் உணவுக்காக மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தபோது indha விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் அப்பளம் போல் நொறுங்கியுள்ளன. லாரி ஓட்டுனரின் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் தப்பியோடிய லாரியின் பதிவு எண் கிடைத்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உடனேயே விரைந்து வந்த விஜயபுரா கிராமாந்தர பிரிவு டி வொய் எஸ் பி கிரிமல்லா தலைக்கட்டி மற்றும் அதிகாரிகள் பரிசீலனை நடத்தி வழக்கு பதிவு செய்து உடல்களை உடற்கூறு சோதனைக்கு அனுப்பிவைத்தனர் .