சாலை விபத்தில் தம்பதி சாவு-14 மாத குழந்தை கவலைக்கிடம்

சிக்கமகளூர் : செப்டம்பர். 13 – கார் , டிப்பர் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கிடையே நடந்த தொடர் சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதி இருவர் அதேஇடத்தில் உயிரிழந்திருப்பதுடன் 14 மாத குழந்தை தீவிர காயமடைந்துள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் இன்று அதிகாலை சகராயப்பட்டானா அருகில் நடந்துள்ளது. சிவமொக்காவை சேர்ந்த சையத் ஆசிப் (38) , மற்றும் மஜினா (33) ஆகியோர் விபத்து நடந்த
இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் தீவிர காயங்கனளடைந்த 14 மாத குழந்தை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாயுள்ளது. தம்பதியர் சிக்கமகளூரிலிருந்து அதிகாலை சிவமொக்கவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது சகராயணப்பட்டனா அருகில் இந்த விபத்து நடந்துள்ளது . டிப்பர் வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ள நிலையில் இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்து
வந்த சகராயப்பட்டனா போக்குவரத்த்து போலீசார் மேற்பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.