
பெங்களூரு, ஆக. 18: பெங்களூரு மாநகராட்சிக்கு வெளியே சாலை விரிவாக்கப்பணிகளுக்காக சுமார் 500 மரங்கள் வெட்டப்படுகின்றன.பெங்களூருவில் சாலை விரிவாக்கம் முதல் காவல்துறை மற்றும் ரயில்வே ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கட்டுவது தொடர்பான 6 திட்டங்களுக்காக 500 மரங்கள் வெட்டப்படுகின்றன.
பெங்களூரு நகர்ப்புற வனத்துறை துணைப் பாதுகாவலர், பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு வெளியே இரண்டு பகுதிகளில் மரங்கள் வெட்டப்படுவது குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முதலில், தேசிய நெடுஞ்சாலை 844-ன் நெரலூர்-தொரப்பள்ளி-அகரம் பிரிவு நான்கு வழிச்சாலைப் பணி திட்டப் பகுதியில் உள்ள 158 மரங்களை அகற்றப்பட உள்ளது.
இரண்டாவதாக, ஆனேக்கல் தாலுகாவில் உள்ள இக்களூரு கொம்மலாபுரா எம்.டி.ஆர் சாலையை மேம்படுத்தும் பணிக்காக 74 மரங்கள் வெட்டப்பட உள்ளது.பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள், நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதன் விளைவாக நான்கு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. ஆனந்த் ராவ் சர்க்கிள் அருகே உள்ள போலீஸ் தலைமையகத்தில் கட்டிடம் கட்டுவதற்கு அப்பகுதியில் உள்ள 62 மரங்களில் 52 மரங்களை வெட்ட வேண்டும். இதேபோல் எம்.ஜி. ரயில்வே காலனியில் குடியிருப்புகள் கட்டுவதற்காக 129 மரங்களை வெட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பன்னர்கட்டா சாலையில் உள்ள ஆர்.ஏ.முண்ட்கூர் தீயணைப்பு மற்றும் அவசரநிலை வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணிக்காக 44 மரங்கள் வெட்டப்பட உள்ளது. அதே நேரத்தில், எலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு 44 மரங்களை அகற்றப்பட உள்ளது.
இது பசுமை ஆர்வலர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது