சிஆர்பிஎப் வீரரை விடுவித்த நக்சலைட்டுகள்


ராய்ப்பூர் ஏப்ரல் 8
நக்சலைட் கட்டுப்பாட்டில் இருந்த சிஆர்பிஎப் வீரரை மீட்க சட்டீஸ்கர் மாநில அரசு 2 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவை நியமித்தது. இந்த குழு நக்சலைட்டுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், நக்சலைட்டுகளுக்கு உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, ராகேஷ்வர் சிங் மன்ஹஸை இன்று விடுவித்தனர். தொடர்ந்து, அவர் பிஜாப்பூருக்கு அழைத்து வரப்பட்டார். பாதுகாப்பு படை வீரர் ராகேஷ்வர் விடுதலை செய்யப்பட்டதையடுத்து ஜம்முவில் உள்ள அவரது குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது தொடர்பாக பிஜாப்பூர் எஸ்.பி. கூறுகையில், நாங்கள் அவரை பாதுகாப்பாக திரும்ப அழைத்து வந்துள்ளோம். அவர் இங்கே ஒரு மருத்துவரால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிவித்தார்.