சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்வு

புதுடெல்லி, ஜூலை 16- இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 3-வது நாளாக 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
நாட்டில் மொத்தபாதிப்பு 4 கோடியே 37 லட்சத்து 30 ஆயிரத்து 71 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் கேரளாவில் 27 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 56 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,25,660 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 18,301 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 63 ஆயிரத்து 651 ஆக உயர்ந்தது. தற்போது 1,40,760 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 1,657 அதிகம் ஆகும். இதற்கிடையே நேற்று 22,93,627 டோஸ்களும், இதுவரை 199 கோடியே 71 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.