சிசோடியா மீதான புகாருக்கு ஆதாரம் எங்கே? – உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி, அக். 6- டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-ல் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதில் முறைகேடு நடந்ததாகபுகார் எழுந்தது. இதையடுத்து, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மணிஷ் சிசோடியா தாக்கல் செய்த ஜாமீன் மனு, உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் கூறியதாவது: டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் லஞ்சம் கைமாறியதாக கூறுகிறீர்கள். யார் அதை வழங்கினார்கள்? இந்த வழக்கில் மணிஷ் சிசோடி மீதான புகாருக்கு ஆதாரம் எங்கே? தினேஷ் அரோரா என்பவரின் வாக்குமூலத்தைத் தவிர வேறு ஏதாவது ஆதாரமோ, ஆவணமோ இருக்கிறதா?சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் இவர் மீது எப்படி குற்றம்சாட்டுகிறீர்கள்? இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.