சிடி லீலை – விரைவில் குற்றப்பத்திரிகை

பெங்களூரு, ஜூன் 10- முன்னாலமைச்சர் ரமேஷ் ஜாரகஹோலி தொடர்பான ஆபாச சி டி விவகாரம் குறித்து விசாரணை நடத்தியுள்ள சிறப்பு ஆய்வு குழு (எஸ் ஐ டி ) விரைவில் தங்கள் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர். இந்த விவகாரத்தில் ரமேஷ் ஜாரகஹோலியை மிரட்டிய குற்றவாளிகளான முன்னாள் பத்திரிகையாளன் நரேஷ் கௌடா மற்றும் ஷ்ரவன் உட்பட மேலும் சிலரையும் குற்றவாளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு தொடர்பாக நரேஷ் கௌடா மற்றும் ஷ்ரவன் இருவருக்கும் நீதிமன்றம் முன் ஜானின் வழங்கியுள்ளது. இன்னொரு விதத்தில் இளம் பெண்ணின் சம்மதத்துடனேயே பாலியல் தொடர்பு கொண்டதாக ரமேஷ் ஜாரகஹோலி தெவித்துள்ளார் . பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பலவந்தமாக பாலியல் தொடபு கொள்ளவில்லை. என முன்னாள் அமைச்சர் எஸ் ஐ டி போலீசாரிடம் தெரிவித்துளார். தவிர வைரல் ஆகியுள்ள வீடியோவை வைத்து பணத்திற்காக தன்னை மிரட்டுவதாகவும் ஜாரகஹோலி குற்றம்சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் உட்பட இன்னும் சில பேருக்கு எதிராக எஸ் ஐ டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வாய்ப்புகள் உள்ளது. மற்றொரு கோணத்தில் எஸ் ஐ டி யின் தலைவராகவுள்ள சௌமேந்து முகர்ஜி விடுப்பில் சென்றுள்ளார். இந்த விவகாரத்தின் விசாரணையின் போது அவர் விடுப்பில் சென்றுள்ளது குறித்து நகர போலீஸ் ஆணையர் கூறுகையில் முகர்ஜீ இதற்கு முன்னரும் விடுப்பில் சென்றுள்ளார். இதில் எவ்வித குழப்பமும் தேவையில்லை. எஸ் ஐ டி தன் கடமையை சரியாக நடத்தி வருகிறது என்றார்.