சிட்னி டெஸ்ட்: ரிஷப் பண்ட் அபாரம் – டிராவில் முடிந்தது

சிட்னி, ஜன.11-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் இறுதி நாளான இன்று தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராடி ஆட்டத்தை டிரா செய்தது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி புகோவ்ஸ்கி, லபுஸ்சேன், ஸ்மித் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 105.4 ஓவரில் 338 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் புகோல்ஸ்கி 62 ரன், லபுஸ்சேன் 91 ரன், ஸ்மித் 131 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டு, பும்ரா, சைனி தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுப்மான் கில், புஜாரா ஆகியோர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து அவுட்டாகினர்.ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஹசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 312 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. க்ரீன் 84 ரன்னும், ஸ்மித் 81 ரன்னும், லபுசேன் 73 ரன்னும் எடுத்தனர். இந்தியா வெற்றி பெற 407 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
இந்தியா சார்பில் ரோகித் சர்மா, சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 31 ரன்னில் வெளியேறினார்.
பொறுப்புடன் ஆடிய ரோகித் சர்மா அரை சதமடித்தார். அவர் 52 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ரகானே 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் புஜாரா நிதானமாக ஆடினார். அவருடன் இணைந்த ரிஷப் பண்ட் முதலில் பொறுமையாக ஆடினார். நேரம் போக போக அதிரடியை காண்பித்தார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரியுமாக விளாசி அரை சதமடித்து அசத்தினார்.
அபாரமாக ஆடிய ரிஷப் பண்ட் 97 ரன்களுக்கும், புஜாரா 77 ரன்களுக்கும் அவுட்டாக இந்திய 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தோல்வியை தவிர்க்க இந்திய அணி கடுமையாக போராடியது. விஹாரயுடன் ஜோடி சேர்ந்த அஸ்வின் அபாரமாக ஆடினார். ஆஸ்திரேலிய அணியினரின் அபார பந்து வீச்சை இந்த ஜோடி அபாரமாக தடுத்தாடியது. முடிவில் ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்கள் எடுத்திருந்தது. அஸ்வின் 39 ரன்களுடனும் விஹாரி 19 ரன்களுடனும் களத்தில் இ