சிதம்பரம் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது

சிதம்பரம்: டிச. 18: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. உத்சவ ஆச்சாரியார் பூஜைகள் செய்து கொடியேற்றி வைத்தார். வருகிற 26 ஆம் தேதி தேரோட்டமும், 27 ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது
பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்குவது சிதம்பரம் நடராஜர் கோவில் இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் வரும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் ஆருத்ரா தரிசன விழாவும் பிரசித்தி பெற்றது இந்த ஆண்டு மார்கழி மாதத்திய ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது கோவிலில் நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்திற்கு உற்சவ ஆச்சாரியார் மீனாட்சி நாடக தீட்சிதர் பல்வேறு பூஜைகள் செய்தார் கொடிமரத்தில் கொடியேற்றி வைத்து வைத்தார் இதை தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆர்மி தரிசனம் செய்தனர் தினந்தோறும் பஞ்ச மூர்த்திகள் வீதி வினா நிகழ்ச்சிகள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அலையில் தேரோட்டம் நடைபெறும் அன்று நடராஜர் சிவகாமசுந்தரி விநாயகர் முருகர் சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்தலில் வைத்து நான்கு மாத வீதிகளையும் வலம் வரும் அன்று இரவு தேர் நிலைக்கு வந்தவுடன் நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து பல்வேறு அர்ச்சனைகள் நடைபெறும் மறுநாள் 27ஆம் தேதி புதன்கிழமை காலையில் மகா அபிஷேகம் நடைபெற உள்ளது.
அதைத்தொடர்ந்து நடராஜர் சிவகாமசுந்தரிக்கு திருவாபரண அலங்காரம் பிச்சபையில் ரகசிய பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் பின்னர் மதியம் 2 மணி அளவில் நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து நடனமாடியபடியே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர் புகழ்பெற்ற இந்த ஆருத்ரா தரிசன விழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் கோயில் விழாவிற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.