சித்தராமையா குறித்து முதல்வர் கடும் விமர்சனம்

பெங்களூர்,நவ.15- காங்கிரஸ் ஆட்சியில் அரிசி ஊழலை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை கடும் விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த
அன்னபாக்யா யோஜனா மறக்கப்படவில்லை. உங்கள் காலத்தில் நடந்த முறைகேடுகள் ஊழல்கள் ஏராளம். தங்கும் விடுதிகளுக்கு கொடுக்க வேண்டிய தலையணை, படுக்கையில் கூட ஊழல் நடந்தது. பிடிஏ, ஊழல், மக்களை பிரிக்கும் முயற்சியை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்று விமர்சித்துள்ளார்.
சிக்கமகளூருவில் உள்ள கடூரு தாலுகாவில் பாஜக நடத்திய ஜன் சங்கல்ப யாத்திரையில் அவர் பங்கேற்றார்.2013-ல் முதல்வராக வேண்டும் என்று அவர் கேட்டபோது மக்கள் அவரை ஆசிர்வதித்து அவரும் முதல்வரானார். ஆசிர்வதித்த மக்களுக்கு அவர் ஒன்றுமே செய்யவில்லை என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்