
பெங்களூர் : மார்ச். 18 –
முன் வரும் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி 125 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவு செய்து உகாதி பண்டிகை நேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட தயாராகி வருகிறது. ஆனால் மாநில எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை இன்னமும் கட்சி மேலிடம் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் சித்தராமையா தொகுதி குறித்த குழப்பம் இன்னமும் நீடித்து வருகிறது.
சித்தராமையா கோலாரிலிருந்து போட்டியிடுவாரா அல்லது மைசூரின் வருணா தொகுதியிலிருந்து போட்டியிடுவாரா என்ற குழப்பம் இன்னமும் நீடிக்கிறது. சித்தராமையா இந்த விஷயத்தில் கட்சி மேலிடம் அளிக்கும் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார் என தெரிய வருகிறது.
சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு சம்மந்தமாக நேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த கூட்டத்தில் 125 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தற்போதைய எம் எல் ஏக்கள் அனைவருக்கும் டிக்கெட் வழங்க முடிவுசெய்திருப்பதுடன் இந்த கூட்டம் நடந்துகொண்டிருக்கும் நிலையிலேயே சித்தராமையா ராகுல் காந்தியையும் சந்தித்துள்ளார்.
அப்போது சித்தராமையாவை கோலாரிலிருந்து போட்டியிட வேண்டாம் . வருணாவிலிருந்தே போட்டியிடுமாறு அறிவிருத்தியதாக தெரிகிறது.
ராகுல் காந்தியின் இந்த ஆலோசனைக்கு பின்னர் சித்தராமையாவுக்கு எந்த தொகுதியை ஒதுக்குவது என்பது குறித்து இனமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை .
அடுத்த சி இ சி கூட்டத்தில் சித்தராமையாவீண் தொகுதி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன . சித்தராமையா இதற்கு முன்னர் கோலாரிலிருந்து போட்டியிட முடிவு செய்திருந்தார். நேற்றைய கூட்டத்தில் சித்தராமையாவுக்கு கோலார் தொகுதி அந்தளவிற்கு பாதுகாப்பானதாக இல்லை என வந்த தகவல்களின் பின்னணியில் இவர் வருணாவிலிருந்து போட்டியிடுவதா உத்தமம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. கடைசியில் சித்தராமையாவின் தொகுதி குறித்த முடிவை கட்சி மேலிடமே எடுக்கும்.
கட்சி மேலிடம் அறிவிக்கும் தொகுதியிலேயே நான் போட்டி இடுவேன் என சித்தராமையாவும் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.