
பாகல்கோட்டே : ஆகஸ்ட். 3 – சித்தராமோஸ்தவாவுக்கு புறப்பட்ட க்ரூஸர் கார் பல்டி அடித்து உருண்டதில் ஒருவர் அதே இடத்தில் ஒருவர் இறந்திருப்பதுடன் 12 பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஹூப்ளி – சொல்லப்புரா தேசிய நெடுஞசாலை பாதாமி தாலூகாவின் ஹுலகேரி கிராமத்தின் அருகில் நடந்துள்ளது. க்ரூஸர் வாகன ஓட்டுநர் பிரகாஷ் படிகேர் (34) இந்த விபத்தில் இறந்தவர். காயமடைந்த பாபு அப்பாசாப் , நடாப் , சிவப்பா சிச்சகந்தி , சோமேஷ் ஹொம்பாலே , சித்தப்பா பஞ்சகாவி , முத்தப்பா குஞ்சாகோலா , முதகப் ஹொம்பாலே , மற்றும் ஸ்ரீசைலா மடபதி , ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் மூன்று பேர் நிலைமை கவலைக்கிடமாயுள்ளது. சம்பவ இடத்திற்கு கெரூரு போலீசார் வந்து மேற்பார்வையிட்டு பரிசீலனை செய்துள்ளனர். மாவட்ட மருத்துவமனைக்கு போலீஸ் உயர் அதிகாரி ஜெயப்ரகாஷ் நேரில் சென்று தகவல் சேகரித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் கோவிந்த் காரஜோலா தன் அனுதாபத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் கூறுகையில் தாவணகெரே சித்தராமோஸ்தவாவுக்கு முதோளா தாலூகாவின் ஆலகுண்டி கிராமத்தின் இளைஞர்கள் புறப்பட்டுள்ளனர். அப்போது ஹுலகேரி கிராமத்தின் அருகில் இவர்கள் பயணித்த க்ரூஸர் வாகனம் விபத்துக்குள்ளாகி வாகன ஓட்டுநர் இறந்துள்ள செய்து அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் காயமடைந்தோர் விரைவில் குணமடையட்டும். இறந்து போன பிரகாஷ் ஆத்மா சாந்தி அடையட்டும் என கடவுளை பிரார்த்திப்பதாக கோவிந்த் காரஜோலா தன் அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.